தாயகச் செய்தி 

வற்றாப்பளை ஆலய உற்சவத்திற்கு சென்ற இளைஞரொருவர் விபத்தில் பலி

முல்லைத்தீவு வற்றாப்பளை  ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞரொருவர் விபத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நித்திரை கலக்கம் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.பலியான இளைஞன் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தையிட்டியில் பெருமளவான காவல்துறை குவிப்பு

தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்று (10) 2ஆம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர், தையிட்டியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற கோரி நேற்று (09) மாலை முதல் , காணி உரிமையாளர்கள் , மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் மாலை வரையில் நடைபெறவுள்ளது இந்நிலையில் விகாரைக்கு தெற்கில் இருந்து பெருமளவான சிங்கள மக்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க