செய்திகள் தாயகச் செய்தி 

பாசிக்குடாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.ச பஸ் விபத்து:

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பஸ்ஸில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.   உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

காணிகளை கையகப் படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத் திற்கு இல்லை

வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக பாராளுமன்றத்தின் குழு அறை 1 இல் நேற்று (23) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.   இதுவரை காலமும் வடக்கு மற்றும் கிழக்கில் நில உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் மேற்கொண்ட திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும், காணிகளை சொந்தமாக வைத்திருப்பவர்களிடம் தங்கள் உரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி 

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் மாலினி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார். சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மரணிக்கும்போது அவருக்கு 76 வயதாகும். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி களனியில் பிறந்த அவரது இயற் பெயர் வன்னி ஆராச்சிகே மாலினி செனஹெலதா பொன்சேகா எனும் பெயரில் பிறந்த இவர், பின்னர் இலங்கை சினிமாவில் மாலினி பொன்சேகா எனும் பெயரில் பிரபலமானார். 1963 ஆம் ஆண்டு மேடை நாடகங்களில் அறிமுகமான திருமதி மாலினி பொன்சேகா, 1968 ஆம் ஆண்டு புஞ்சி பபா எனும் சிங்கள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 1963 ஆம் ஆண்டு “நோரத ரத” நாடகத்துடன்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்;

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம்   வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோகி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது.இதனால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நகரில் இருந்து அந்த பிரதேசத்துக்கு செல்லும் பொது போக்குவரத்து பஸ் வண்டி பாலம் ஊடாக செல்ல முடியாது.அந்த பாலம் வரை…

மேலும் படிக்க