இலங்கை செய்தி. செய்திகள் 

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு 3,050 மெற்றிக் தொன் உப்பு

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு 3,050 மெற்றிக் தொன் உப்பை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக் தொன் உப்பும், தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பும் இதில் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் மாதாந்திர உப்புத் தேவை 15,000 மெற்றிக் தொன் என்பதுடன், ஆண்டுத் தேவை 180,000 மெட்ரிக் தொன் ஆகும். நாட்டின் உப்பு அறுவடை இரண்டு பருவங்களில் மேற்கொள்ளப்படுவதுடன், ஒருபோகுத்தின் அறுவடை பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரையிலும், அடுத்த போகத்தின் அறுவடை ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஒக்டோபர் நடுப்பகுதி வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் IPL போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த 26 வயதான பரமானந்தம் கோவிந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞன் நேற்று முன்தினம் (20) இரவு உணவருந்திவிட்டு தொலைக்காட்சியில் IPL கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தவேளை திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து வரை வீட்டார் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருதய அறைக்குள் இரத்த கசிவு ஏற்பட்டமையால் மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

சுமார் ரூ. 7 கோடிக்கும் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

சுமார் ரூ. 7 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவந்த விமான பயணிகள் 4 பேரை விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகநபர்கள் நேற்று (21) பிற்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.இந்தக் குழுவில் திருமணமான தம்பதியும் ஆண் மற்றும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. சந்தேகநபர் இந்த போதைப்பொருள் கப்பலை தாய்லாந்திலிருந்து கொள்வனவு செய்து, பின்னர் இந்தியாவின் பெங்களூருக்குப் பயணம் செய்து, அங்கிருந்து இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வணிகர்களுக்கான “Red Channel” வழித்தடம் ஊடாக போதைப்பொருளுடன் வெளியேற முயன்றதாகக் கூறப்படுகிறது. பெண் சந்தேகநபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும், ஆண் சந்தேகநபர் கொழும்பு 15 பகுதியில் வசித்து வரும் வர்த்தகராவார்.…

மேலும் படிக்க