தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக் குழு : குடும்பம் மீது தாக்குதல்

கட்டைக்காடு கிழக்கில் வன்முறைக்குழு அட்டகாசம்: கைக்குழந்தையுடன் இருந்த குடும்பம் மீது தாக்குதல் முயற்சி!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் நேற்று (21) இரவு புகுந்தல் வன்முறைக்குழு ஒன்று, வீடுகளைச் சேதப்படுத்தியும் வாகனங்களை அடித்து நொருக்கியும் பாரிய அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
நேற்று இரவு வாள்கள், கத்திகள் மற்றும் கற்களுடன் திரண்டு வந்த வன்முறைக்குழுவினர், கட்டைக்காடு கிழக்கிலுள்ள வீடு ஒன்றின் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றுள்ளனர். அந்த வீட்டில் கைக்குழந்தைகளுடன் ஒரு குடும்பம் தங்கியிருந்த வேளையிலேயே இந்தத் தாக்குதல் முயற்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வன்முறையின் போது வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அங்கிருந்த உழவு இயந்திரம் மற்றும் வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
குறித்த வன்முறைக்குழுவினர் மதுபோதையில் நீண்டகாலமாக அப்பகுதி குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
என்றாலும், இந்த வன்முறைக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக ஏற்கனவே பல முறைப்பாடுகள் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள போதிலும், அவர்களைக் கைது செய்ய பொலிஸார் தயக்கம் காட்டுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து

Leave a Comment