இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக மயூர நெத்திகுமாரகே!

எரிபொருளுடனான மற்றொரு கப்பல் நாட்டுக்கு வந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.இந்த கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன்  பெட்ரோல்  மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல்  இருப்பதாகவும் அவர் கூறினார்.இவற்றை இறக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர்,

கேள்வி மனுக்கு அமைவாக ஏனைய அனைத்து எரிபொருள் கப்பல்களும் படிப்படியாக நாட்டை வந்தடையும் என்றும் அவர் கூறினார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்மைச் செய்தி

Leave a Comment