இலங்கை செய்தி. உலக செய்திகள் 

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் அவசரமாக கொழும்பு வருகை!

ரஷ்ய வெளியுறவு பிரதியமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ நேற்று (31) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்தார்.

இவருடன், ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உயரதிகாரி ஒருவரும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்திய தலைநகர் பதுடில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று மாலை 04.20 மணியளவில், இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதியமைச்சர் பொறியாளர் ஜனிதா ருவன் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்யத் தூதர் லெவன் ஜகரேயன் ஆகியோர் விமான நிலையம் சென்று ரஷ்ய பிரதியமைச்சரை வரவேற்றனர். இலங்கை-ரஷ்யாவுக்கிடையிலான 11 ஆவது அரசியல் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில், இவர் இலங்கை வந்துள்ளார். நாட்டின் உயர்மட்ட தலைவர்களையும் இவர் சந்திப்பாரென வௌிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

அன்மைச் செய்தி

Leave a Comment