இலங்கை செய்தி. 

பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை; எச்சரிக்கை

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அம்பாறை, மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொணராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளைகளில் வெப்ப குறிகாட்டி (மனித உடல் உணரும் வெப்ப அளவு) ‘அவதானம் செலுத்தும் மட்டத்தில்’ காணப்படுமென திணணக்களம் அறிவித்துள்ளது.

எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக, நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அன்மைச் செய்தி

Leave a Comment