அண்மை செய்தி தாயகச் செய்தி 

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு!

கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு!
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கரவெட்டி பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில், இன்றைய தினம் விசேட நிகழ்வொன்று கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
புயல் அனர்த்தத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்த சிறு தொழில்முயற்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் விசேட நிதியுதவித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
 நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
* பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு இழப்பீட்டு காசோலைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
* தொழில் முயற்சியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீண்டும் செம்மையாக ஆரம்பிப்பதற்கும், தொழிலில் முன்னேற்றமடைவதற்குமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
* அரசாங்கத்தின் இந்த நேரடித் தலையீடு, பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் உறுதுணையாக அமையும்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச சபை உறுப்பினர் பிரதேச செயலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் காசோலைகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment