செய்திகள் தாயகச் செய்தி 

கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி மீது காவல்துறை யினர் துப்பாக்கிப் பிரயோகம்

கிளிநொச்சியில் காவல்துறையின் கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று (01) அதிகாலை கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சில்லுகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Leave a Comment