விடுதலைப்புலிகளுக்கு அகவை 49

புதிய தமிழ்ப் புலிகள் என்பது 1972 மே 22 ஆம் நாள் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தனது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார் இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்ப்பதையும், தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகர அமைப்பாகும்
புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறைக்கு கொண்டுகொண்டு வரப்பட்டது. 05 05 2025இன்றைய நாளில் 49-வது அகவயினை அடைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது