தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உழவு இயந்திரந்தில் மோதிய ஸ்கூட்டி மோட்டார்சைக்கிள்! யாழில் 36 வயது பெண் மரணம்

: உழவு இயந்திரந்தில் மோதிய ஸ்கூட்டி மோட்டார்சைக்கிள்! யாழில் 36 வயது பெண் மரணம்
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வடக்கு மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தரான சோபிதா வரதன் (36) என்பவர் உயிரிழந்துள்ளார்.
மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரமும் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயும், தென்மராட்சியின் சிறந்த ஓவியக் கலைஞராகவும், தனது கைவண்ணத்தால் பல அழகிய ஓவியங்களைப் படைத்தவராகவும் அறியப்பட்ட சோபிதாவின் இழப்பு, கலைத்துறைக்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என அவரை அறிந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

அன்மைச் செய்தி

Leave a Comment