தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யோகபுரம் மகாவித்தியா லயத்தில் சிறப்புற இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு;

யோகபுரம் மகாவித்தியாலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு; பிரதம விருந்தினராக ரவிகரன் எம்.பி பங்கேற்பு

முல்லைத்தீவு – மல்லாவி, யோகபுரம் மகாவித்தியாலயத்தில் 16.09.2026நேற்று மாணவர் பாராளுமன்ற அமர்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் பாடசாலையின் முதல்வர் க.சசிகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது மாணவர் பாராளுமன்ற அணியினர் மற்றும் விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாடசாலை முதல்வரின் தலைமையுரை இடம்பெற்றதையடுத்து மாணவர் பாராளுமன்ற அமர்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமானது.

அதற்கமைய மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமரால் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து மாணவர் பாராளுமன்துறைசார் அமைச்சர்களால் தமது அமைச்சுசார் நலத்திட்டங்கள் தொடர்பான முன்வைப்புக்களை முன்வைத்தனர்.

அந்தவகையில் மாணவர் பாராளுமன்றம் காரசாராமான விவதங்களுடன் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்பட்டு மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment