இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இ.போ.ச பஸ் விபத்து.

15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இ.போ.ச பஸ் விபத்து. சாரதிக்கு படுகாயம்; பயனிகளுக்கு பேரும்/சிறு காயம். மொனராகலையில் சம்பவம்.
மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கி சுமார் 45 பயணிகளுடன் பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, புத்தள – மஹகொடய பகுதியில் இன்று (11) அதிகாலை 3.55 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
​இவ்விபத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின் சாரதி சிகிச்சைக்காக மொனராகலை போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிலும், ஏனைய பயணிகள் சிறு, பெரு காயங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், அவர்களும் மொனராகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு மற்றும் வேகமே காரணம் என தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment