தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஆழிப்பேரலை நினைவுக் கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன்

ஆழிப்பேரலை நினைவுக்கிண்ணத்தை தனதாக்கியது வட்டுவாகல் உதயசூரியன்

முல்லைத்தீவு – கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழகத்தினால் அமரர் நாகேஸ்வரன் றமணா ஞாபகார்த்தமாக ஆழிப்பேரலை நினைவுக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் ஒன்று நடாத்தப்பட்டது.

குறித்த கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியும், அளம்பில் இளந்தென்றல் விளையாட்டுக்கழக அணியும் மோதின.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் வட்டுவாகல் உதயசூரியன் விளையாட்டுக்கழக அணியினர் வெற்றியீட்டி கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர்.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செ.திலகநாதன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா, முல்லை மறைக்கோட்டத்தின் பங்குத்தந்தை எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment