18 வயது கனேடிய யுவதி ரூ. 35 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் கைது!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 352.65 மில்லியன் தெரு மதிப்பிலான போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி ஒருவர் இலங்கைச் சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCU) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் அதன் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்தார்.
நேற்று (23) இரவு 10.40 மணியளவில் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK 648 எனும் விமானம் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ரூ. 352.65 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான யுவதி மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் (PNB) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேசசாளர். தற்போது இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளைச் சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

