பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில். முள்ளிவாய்க் கால் இனப்படு கொலை யின் 17வது ஆண்டு நினைவேந்தல்

தமிழினத்தின் வலி நிறைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்றைய தினம் 12.05.2026 செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
​​இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்துகொண்டு நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இந்த நினைவேந்தல்​நிகழ்வின் தொடக்கத்தில், உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூறும் முகமாக மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச் சுடர்களும் ஏற்றப்பட்டன.தொடர்ந்து இறுதிப் போரின் போது மக்கள் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்கவும், உயிர் வாழவும் ஆதாரமாக விளங்கிய வரலாற்றுச் சுவடுமிக்க ‘உப்பில்லா கஞ்சி’ பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பிரதி முதல்வர், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment