நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதம்
நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை பெய்த கனமழையால் பல வீடுகள் சேதமடைந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திகம பகுதியில் வீசிய மினி சூறாவளி காரணமாக 15-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.நேற்று மாலை 3:00 மணியளவில் திடீரென ஏற்பட்ட கடும் மழையுடன் கூடிய மினி சூறாவளி காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றில் பறந்து அருகில் இருந்த மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது.

