இத்தாலியில் பணி யாற்றிய இலங்கை வம்சாவளி பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு
இத்தாலிய பொலிஸ் துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை வம்சாவளி அதிகாரியான 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ , மிலனில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ, தல்டேனாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷெஹான், மிலனில் உள்ள தனது தங்குமிடத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக இத்தாலிய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவரது உடலுக்கு அருகிலேயே அவரது பணித் துப்பாக்கியும் (Service Weapon) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் ஒரு தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது குறித்து இத்தாலிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

