துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் பாரிய தாக்குதல்
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.விமான நிலையத்திலிருந்த எரிபொருட் கிடங்கை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.மத்தியகிழக்கிலுள்ள அமெரிக்க நலன்களை அழிக்கும் வகையில் இத்தாக்குதல் அமைந்தது. இதனால் வானைத் தொடுமளவு புகை மண்டலம் தென்பட்டது.
பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து தெரியும் அளவுக்கு அடர்த்தியான கரும்புகையை வானத்தில் காண முடிந்தது. துபாய் ஊடக அலுவலகம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்து, பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது .தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

