ஹிங்கு ரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் ஒருவர் கைது
ஹிங்குரங்கொட பகுதியில் இராணுவ சீருடை , கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை தன்வசம் வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அரச புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய விசேட பொலிஸ் அதிரடிப் படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரின் வீட்டில் ஒரு கைக்குண்டு , பல்வேறு வகையான வெடிபொருட்கள், வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் 36 பயிற்சி தோட்டாக்கள் பல சீருடைகள் , நான்கு கெமா தொப்பிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
ஹிங்குரங்கொட கிம்புலாவல பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்த இராணுவ உபகரணங்கள் மற்றும் சீருடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர் ஹிங்குரங்கொட கிம்புலாவல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது

