உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் ஈரானின்! மறுத்துள்ளஅமெரிக்க.

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் இருந்ததாக வெளியாகும் தகவல்களை அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல் ஒரு முறையான இராணுவ இலக்கு (Legitimate Military Target) என்றும் அந்தப் போர்க்கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு எனவும் அமெரிக்கத் தரப்பு விளக்கமளித்துள்ளது.

இதற்கமைய அந்த கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை தரப்பினால் உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் கீழ், ஈரானிய இராணுவச் சொத்துக்கள் அனைத்தும் இலக்கு வைக்கப்படுவதாக அமெரிக்கா முன்னரே எச்சரித்திருந்தது.

சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் போர்க்கப்பல் அதன் ஆயுதங்களைப் பயன்படுத்தாத நிலையில் இருந்தாலும், போர்ச் சூழலில் அது ஒரு தற்காப்பு அல்லது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இராணுவ இலக்காகவே கருதப்படும் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரானியத் தரப்பு இந்தக் கப்பல் ‘அமைதி நோக்கம்’ கொண்டது எனக் கூறிய போதிலும், அதன் தொழில்நுட்பத் திறன் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகப் பென்டகன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment