இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண் களுக்கு எங்கே பாதுகாப்பு?

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு? நுவரெலியாவில் போராட்டம்!

உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இச்சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் இருபாலாரும் இச்சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும், இவ்வாறான செயலில் ஈடுபட்ட மூன்று பேரும் பணியில் இருந்து உடனடியாக இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இச்சம்பவம் இனியும் இலங்கையில் எப் பகுதியிலும் நடைபெறாத வண்ணம் இன்றைய அரசாங்கம் கவனம் கொள்ள வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அதன்படி ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா போன்ற பகுதிகளில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Comment