விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில்,இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு ரயிலுடன் மோதிய கெப் வாகனம் அருகில் உள்ள நிர்மாணத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருடையது என தெரியவந்துள்ள.
ரயில் மோதியதையடுத்து கெப் வாகனம் சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி உட்பட மூன்று நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளனர்.

