ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்து
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
ஹட்டன் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வர்த்தக லொறி ஒன்று, வட்டவளை சிங்கள பாடசாலைக்கு அருகில் உள்ள பாதாள மதகு ஒன்றிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.லொறிக்குள் இறுகிய நிலையில் சிக்கிக்கொண்ட சாரதி மற்றும் உதவியாளரை, பொலிஸாரும் பொதுமக்களும் சுமார் 1 மணிநேரம் போராடி மீட்டனர்.காயமடைந்தவர்கள் முதலில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை களைப்பு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

