குடும்பிமலை பிரதேசத்தில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு.
சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டதாக வாழைச்சேனை காவல்துறை.தெரிவித்தனர்.
இது தொடர்பாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குடும்பிமலை பிரதேசத்தில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் அண்மையில் இவை மீட்கப்பட்டதாகவும் இந்த ரொக்கட் லோஞ்சர்கள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை.தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணையை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை காவல்துறை. மேலும் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, இந்த ஆயுதங்கள் எவ்வாறு அந்தப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டன, யாரால் மற்றும் எந்த நோக்கில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படைகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான கோணத்திலும் இந்த விடயம் முக்கியத்துவம் பெறுகின்றதாக பாதுகாப்புத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

