செய்திகள் புலச் செய்திகள் 

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் லண்டனில் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது
அந்த வகையில் இந்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களிலும்  சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் பிரித்தானியாவிலும் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக் குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  கரியாலயம் முன்பாக இன்றையதினம் (04) காலை 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக  பாராளுமன்றம் வரை சென்று நிறைவடைந்தது
இதில் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள், லண்டன் மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழர்களின் அரசியல் உரிமைகள், தன்னாட்சி, மனித உரிமை மீறல்கள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

Leave a Comment