சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிறிதரன்
போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள்
போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் நாளையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது.நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் 07 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

