செய்திகள் தாயகச் செய்தி 

உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள்

தரையில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் காலத்தில் கொள்ளையர்கள் நேரடியாக கடல் மற்றும் ஆற்றில் அகழ ஆரம்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழர் பிரதேசமான
திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.
திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே ஐந்து டிங்கி படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது படகில் சுமார் 30 லிட்டர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன.

Leave a Comment