அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை வழங்கும் ஜூலி சங்
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக விமானங்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்த விமானங்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்’ (Excess Defense Articles Program – EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றதாகவும் டெக்சாஸில் தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த இந்த விமானங்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிட்வா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் விமானங்கள் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டி இந்த 10 விமானங்களும் விமானப்படையின் திறனை அதிகரிப்பதோடு, விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவுமென தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்கவுள்ள செய்தி, இலங்கையின் வான்படைத் திறனை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

