சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் அர்ச்சுனா!

.
பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் பாராளுமன்ற ,உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எமது உறுதிகள் பொய்யானவை என்பதனை நிரூபிக்கப்பட்டும்

தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்டுள்ள எமது காணிகளுக்கான உறுதிகள் பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் பாராளுமன்ற ,உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எமது உறுதிகள் பொய்யானவை என்பதனை நிரூபிக்கப்பட்டும் என காணியை இழந்த உரிமையாளர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.யாழ் ஊடக அமையத்தில், தையிட்டி விகாரையால் காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

Leave a Comment