சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வேலன் சுவாமிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்

தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்
சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான
தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு
எதிரான நேற்றைய போராட்டத்தின்போது மதகுரு எனவும் பாராது வேலன் சுவாமிகள் வலுக்கட்டாயமாக  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
நேற்று மதியம் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் பலாலி  காவல்துறையினரால் முற்படுத்தப்பட்டிருந்தவேளை வேலன் சுவாமிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment