கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் கைது
இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அரச புலனாய்வு துறை அதிகாரிகளினால் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகளினால்நேற்று (10) ஹிங்குரன்கொட பொலிஸ் பிரிவின் கிம்புலாவள பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு,தோட்டாக்களை அதிரடிப்படையினர்
செய்யப்பட்டவர் 46 வயதுடைய ஹிங்குரன்கொட,கிம்புலாவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிரடிப்படையினர் சந்தேகநபரை ஹிங்குரன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஹிங்குரன்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி எல்லேபொள தலைமையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் ஹிங்குரன்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

