தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அந்தோனியார் ஆல யத்திற்கு ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துஉயிரிழந் தோரின் எண்ணி க்கை அதிகரித்து ள்ளது. 

யாழ்ப்பாணம் – பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்த 06ஆம் திகதி குருநகர் இறங்கு துறையில் இருந்து பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்கு உள்ளானது. இதன்போது கடலில் மூழ்கி அன்றைய தினம் இருவர் உயிரிழந்ததுடன்,

சிறுவன் உள்ளிட்ட 13 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த உரும்பிராய் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய எட்வேட் உதயகுமாரி  என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்  உயிரிழந்துள்ளார். இதேவேளை முன்னதாக  நாவற்குழி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய  ஸ்டீபன் பிரான்சிஸ், குருநகர், பழைய பூங்கா சாலையை சேர்ந்த  80 வயதுடைய எம். ஜோசப் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து அதிக சுமை காரணமாக ஏற்பட்டதா அல்லது இயந்திரக் கோளாறு காரணமா என்பது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாரும் கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

அன்மைச் செய்தி

Leave a Comment