பொதுவான செய்திகள் 

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில்

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் சில பாடங்கள் இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் பத்தாம் திகதி ஆரம்பமாகின.

டிசம்பர் முதலாம் திகதி இப்பரீட்சைகள் முடிவடையவிருந்தன.இநநிலையில்,திடீரென இயற்கை அனர்த்தத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்ததால்,சில பாடங்களுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.இதன் பிரகாரம் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சையை ஜனவரி 12 ஆம் திகதி முதல் நடத்த பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீடு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment