யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!
யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா சென்ற கார் விபத்து!– அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூவர்
யாழ்ப்பாணத்தில் இருந்து பூண்டுலோயா நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் 2.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஷெனன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி, தொலைபேசி இணைப்புக் கம்பமொன்றையும் உடைத்துக்கொண்டு, ஹட்டன் ஓயாவை நோக்கி நீர் செல்லும் கால்வாயொன்றில் கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்றபோது காரில் மூவர் பயணித்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பு ஆசனப்பட்டிகளை அணிந்திருந்ததால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், விபத்தில் காருக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

