செம்மணிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு பொறுப்புக்கூறுவதை வலியுறுத்தியும் நீதி கோரும் வகையிலும் யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு நேற்று (30) யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது. அரியாலை புனித யூதாததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இப்பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கையை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ் வாசித்தமை குறிப்பிடத்தக்கது

