இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் நேற்று வரை டெங்கு மரணம் 61; 82,011 பேர் பாதிப்பு

நாட்டில் நேற்று வரை பதிவாகியுள்ள  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதென்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த ஆண்டின்  நேற்றுவரையான காலப்பகுதியில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5639 பேரும், கண்டியில் 5634 பேரும், களுத்துறையில் 5355 பேரும் இரத்தினபுரியில் 4553 பேரும், காலியில் 4534 பேரும் பதிவாகியுள்ளனர்.

அந்த வகையில் ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் மேலும் தெரிவித்துள்ளது

 

அன்மைச் செய்தி

Leave a Comment