தாயகச் செய்தி 

இனியவாழ்வு இல்ல த்தின் பொதுச்சபை யைக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்க;

இனியவாழ்வு இல்லத்தின் பொதுச்சபையைக் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்க; பழையமாணவர்களும், பெற்றோரும் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லத்தின் பொதுச்சபையை விரைவாக கூட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொழ்ளுமாறு, இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், பெற்றோரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு விரைவில் பொதுச்சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் 18.07.2026நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லத்தில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், உடனடியாக பொதுச்சபையைக் கூட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், அங்கு கல்வி கற்கும் மாணவர்களுடைய பெற்றோர்கள் பலரும் இணைந்து கடந்த 30.06.2026ஆம் திகதியன்று ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து இதுதொடர்பில் அண்மையில் இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், அங்கு கல்விகற்கும் மாணவர்களுடைய பெற்றோர்கள் சிலரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களை அவரது அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்து இதுதொடர்பில் முறையீடு செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 18.07.2026நேற்று இனியவாழ்வு இல்லத்தின் பழையமாணவர்களும், பெற்றோர்கள் பலரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களை நேரில் அழைத்து கலந்துரையாடியுள்ளனர்.

அந்தவகையில் வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இனியவாழ்வு இல்லத்தின் பொதுச்சபையை விரைவில் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டதுடன், மகஜயர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment