இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நள்ளிரவு முதல் அதிர்ச்சி; மீண்டும் எரிபொருள் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபா ஆகும்.

95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 495 ரூபா ஆகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 407 ரூபா ஆகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 478 ரூபா ஆகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபா ஆகும்.

இந்த விலை திருத்தங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வந்துள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் அறிவித்துள்ளது.

இந்தத் திடீர் விலை அதிகரிப்பு வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது.

அன்மைச் செய்தி

Leave a Comment