இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முற்பகல் வௌியிடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு இன்று முற்பகல் 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசரகால நிலை ஏற்பட்டால், உடனடியாக செயற்படுவதற்கு ஹெலிகாப்டர்களும் படையினரும் தயாராக இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.அதேவேளை, நேற்று பிற்பகலுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில் 256.2 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சியின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றுக்காலை நிலவரத்தின் அடிப்படையில், நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அது இலங்கையை விட்டு நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 48 மணித்தியாலங்களில் படிப்படியாக வலுவிழக்கக் கூடும் என்றும் இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படும்.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி,காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச செயலகப் பிரிவு,களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை, அகலவத்தை, பதுரலிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகள். இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவு.பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, ஹாலி-எல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகள், காலி மாவட்டத்தில் நியகம, தவலம மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள்.களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகள்.கண்டி மாவட்டத்தில் தும்பனை, பஸ்பாகே, தொலுவ, யட்டிநுவர, உடபலாத, கங்க இஹல கோரளை, அக்குரணை, ஹாரிஸ்பத்துவ, உடுநுவர, பூஜாபிட்டிய, கங்கவட்ட கோரளை, பாதஹேவாஹெட்ட, ஹத்தரலியத்த, தெல்தொட்ட மற்றும் பன்வில பிரதேச செயலகப் பிரிவுகள்.

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய, ரம்புக்கனை, கேகாலை, எட்டியாந்தோட்டை மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவுகள்,குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு, மாத்தளை மாவட்டத்தில் நாவுல, அம்பன்கங்கை, கோரளை மற்றும் இரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகள்,மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர பிரதேச செயலகப் பிரிவு ,மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய, பிபிலை மற்றும் படல்கும்புர பிரதேச செயலகப் பிரிவுகள், நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், கொத்மலை வடக்கு மற்றும் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலகப் பிரிவுகள். இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை, அயகம, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியகொட மற்றும் குருவிற்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அன்மைச் செய்தி

Leave a Comment