நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டும், எதிரிகளாக அல்ல”; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்
உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை, சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் இன்று (14) ஆரம்பமானது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைக்காக பெருமளவிலான ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தூதுக்குழுவினர் தற்போது பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
“ஒரு நிலையான இருதரப்பு உறவு உலகிற்கு நல்லது,” என்று குறிப்பிட்ட அவர், “நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிகளாக அல்ல,” என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
“நாம் இணைந்து ஒரு அற்புதமான எதிர்காலத்தைக் கொண்டிருக்கப் போகிறோம்,”அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
இந்த ஆரம்ப உரைகளைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

