தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அக்கரைப் பற்று. உதிரம் கொடுப் போம், உயிர் காப்போம்’ இரத்ததான முகாம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உட்பட இங்குள்ள இதர வைத்தியசாலைகளில் தற்போது நிலவி வரும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினரால் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு ‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ்  இரத்ததான முகாம்  நேற்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில்  பொதுமக்கள் உட்பட பெருமளவு பிரதேச செயலக ஊழியர்கள்  மனமுவந்து தமது உதிரத்தை வழங்க முன்வந்தனர்.வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் இஷான் குணவர்தன தலைமையிலான மருத்துவக் குழுவினர் தமது இரத்தத்தை வழங்க முன்வந்தோரின் உடல் பரிசோதனைகளை மேற்கொண்டதை அடுத்து அவர்களின் இரத்தத்தை பெற்றுக்கொண்டனர்.

இரத்தம் வழங்கிய நன்கொடையாளர்களின் இந்த கைங்கரியத்துக்கு தனது  நன்றியையும்  பாராட்டையும்   பிரதேச செயலாளர் அன்சார் தெரிவித்துள்ளார்.

அன்மைச் செய்தி

Leave a Comment