அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஊவா பரணகம பாரிய சட்டவிரோத மது உற்பத்தி, விற்பனை நிலையம் முற்றுகை

ஊவா பரணகம பிரதேச தோட்ட மக்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக சட்ட விரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்த 08 நபர்களை கைதுசெய்த பொலிஸார் அவர்களிடமிருந்து 750 லீற்றர் கோடா,190 லீற்றர் கரும்புப் பாணி ஆகிய உற்பத்தி மூலப்பொருட்கள் மற்றும் 25 லீற்றர் கசிப்பையும் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஊவா பரணகம பொலிஸாருக்குக் பொது மக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பிரதேசத்திற்குட்பட்ட வோல்டிமார், கீரியகொல்ல மற்றும் தும்பவத்தை பகுதிகளில் உள்ள தோட்ட மக்களை குறிவைத்து நீண்ட காலமாக செயல்பட்டு வந்த பாரிய அளவிலான சட்ட விரோத மதுபான (கசிப்பு) நிலையமொன்றை நேற்று முன்தினம் (09) சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதன்போது ஊவா பரணகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம். அபேசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இந்நடவடிக்கையின் போது கசிப்பு உற்பத்தி மூலப்பொருட்களுடன் பெரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்திய பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இந்த சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment