கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்!
கொழும்பை புறக்கணித்து பெருந்தோட்டத்திற்கு படையெடுக்கும் மலையக இளைஞர்கள்!
கொழும்பு உணவகங்களில் (Hotels) பணிபுரிந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது வேலைகளைக் கைவிட்டு மீண்டும் பெருந்தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டதே இதற்குக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாவாக உயர்த்த அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
பொரள்ளை மற்றும் மருதானை உள்ளிட்ட கொழும்பின் பல உணவகங்களில் பணியாளர்கள் (Waiter), சமையல் கலைஞர்கள் (Chef) உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தற்போது அவர்கள் அதிக ஊதியம் காரணமாக மீண்டும் தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

