வருமானத்தை அதிகரிக்க 2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்!
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், வரி முறையை வலுப்படுத்தவும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2025.05.19 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த புதிய சட்டமூலத்தை விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடவும், பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

