இலங்கை செய்தி. செய்திகள் 

பெந்தோட்டை பகுதியில் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது

அளுத்கம, பெந்தோட்டை பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (31) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 5.105 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் தெரு மதிப்பு ரூ. 7 கோடிக்கும் அதிகமென தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment