தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் 28 திகதி மாலை மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளையடி கடலில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.உடுத்துறை வடக்கைச் சேர்ந்த விஜயமோகன் ஜெசிந்தன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

