இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.

இலங்கையின் தெற்கே கடலில் ‘IRIS DENA’ கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க தாக்குதலில் இறந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் நேற்று இரவு 09.29 மணிக்கு (13) புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறத இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இறந்த மாலுமிகளின் உடல்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.கடந்த 4 ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் சுமார் 180 பேருடன் ஒரு ஈரானிய கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது.அதனைதொடர்ந்து, சுமார் 84 மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், 35 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஒரு டார்பிடோவைப் பயன்படுத்தி சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment