கொக்கட்டிச் சோலையில்.கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை காவல் துறை பிரிவுக்குட்பட்ட மண்முனைப்பாலம் பகுதியில் இன்று பிற்பகல் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று .காவல் துறையினரால்.முற்றுகையிடப்பட்டுள்ளது.
முழுநாடும் ஒன்றாக ஜனாதிபதியின் போதையொழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கொக்கட்டிச்சோலை காவல் துறையினரால்.தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன்கீழ் நேற்றைய தினம்.பிற்பகல் மண்முனைப்பாலத்திற்கு அருகில் உள்ள கன்னக்காடு பகுதியில் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் காவல் துறையினரால்.முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு பறல்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கசிப்பு காய்ச்சுவதற்கான சுமார் 720,000 மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டு காவல் துறையினரால்.அழிக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும் அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் கொக்கட்டிச்சோலை காவல் துறை தெரிவித்தனர்.

