ஈரானின் சட்டபூர்வ உரிமை களை மதித்து, இழப்பீடு களை வழங்க! ஈரான் ஜனாதிபதி
போரை நிறுத்த வேண்டுமானால் ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை மதித்து,இழப்பீடுகளை வழங்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வர வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
போரை நிறுத்துமாறு தொடர்ச்சியாக விடப்படும் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள ஈரான் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அவசியம். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இருப்பையும் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்.வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.இவற்றை செய்தால் மாத்திரமே போரை நிறுத்துவது சாத்தியப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்தாலும் ஈரானின் நிலைப்பாடு இன்னும் மாறாதுள்ளதையே இந்நிபந்தனைகள் வௌிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அயல்நாடுகளை தாக்குவதில்லை என ஈரான் அறிவித்த பின்னரும் சில நாடுகள் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஈரான் ஜனாதிபதி, சில சதிகளை அரங்கேற்றி போரின் போக்கை மாற்றுவதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முயல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

